காந்திநகரில் உள்ள தனது இல்லம் சென்ற பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தாய் ஹீராபென்னிடம் காலில் விழுந்து மோடி ஆசிர்வாதம் பெற்றார்.
குஜாராத் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று காந்திநகர் சென்றார். காந்திநகரில் உள்ள தனது இல்லம் சென்ற பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் (வயது 100) மோடியை சந்தித்து பேசினார். தேநீர் அருந்தியபடி தனது தாயாருடன் பிரதமர் மோடி அன்பாக பேசினர். ஹீராபென் மோடி சொல்வதை பிரதமர் மோடியுடன் மிகவும் கவனமாக கேட்டபடி இருந்தார். முன்னதாக தனது தாயாரை சந்தித்ததும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். சிறிது நேரம் தனது தாயருடன் நேரத்தை செலவிட்ட பிரதமர் மோடி அங்கிருந்து கிளம்பி சென்றார்.
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு நாளை (5ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. குஜராத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்குப் பகுதியில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன. மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 93 தொகுதிகளிலும் 60 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். ஆனால் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடக்கிறது. ஆட்சியை தக்கவைக்க பாஜக கடுமையாக போராடியது. அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பூபேந்திர படேல் போட்டியிடும் காட்லோடியா தொகுதிக்கும் நாளைதான் தேர்தல் நடக்கிறது. இரண்டு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8ம் தேதி (வியாழன்) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.