உக்ரைன் உடனான போர் நீண்ட நாள் நீடிக்கலாம்: அதிபர் புடின்

உக்ரைன் உடனான போர் நீண்ட நாள் நீடிக்கலாம் என ரஷ்யாவின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.

ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனையானது தொடர்ந்து உச்சம் எட்டி வரும் நிலையில், அடுத்த என்ன நடக்குமோ? என்ற பதற்றமான நிலையே இருந்து வருகின்றது. குறிப்பாக உக்ரைன் பிரச்சனையானது அணு ஆயுத பயன்பாடுகள் குறித்தான அச்சம் என்பது அதிகரித்து வருகின்றது. இது அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து ரஷ்யா தனது நிலைபாட்டை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் வருடாந்திர மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ரஷ்ய அதிபர் புடின் காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட நாள் தொடரும் எனவும், ரஷ்யாவிடம் அதி நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய அணு ஆயுதங்கள் பலவும் உள்ளதாகவும் ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார். எனினும் ரஷ்யாவுக்கு பைத்தியம் பிடிக்கவில்லை. ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என்றும் கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவின் வசம் உள்ள அனு ஆயுதங்கள், அமெரிக்காவிடம் உள்ளதை விட சக்தி வாய்ந்தவை எனவும் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் அணுசக்தி கொள்கையானது, நாட்டினுடைய பாதுகாப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தான். ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் பயன்பாடு குறித்து, ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சம் ஏற்பட்டால், அதனை பற்றி யோசிக்கும் என்றும் ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றமான நிலையானது மேற்கொண்டு, இவ்விரு நாடுகளின் பொருளாதாரத்தை மட்டும் அல்லாது, சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு சப்ளை சங்கிலியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பணவீக்கம் குறையாமல் இருக்க வழிவகுக்கலாம். பணவீக்க அச்சம் ஏற்கனவே பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் ஆனது, பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. இதுவே பணப்புழக்கத்தினை மக்கள் மத்தியில் குறைக்க வழிவகுத்துள்ளது. எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய வங்கிகளின் முடிவு என்னவாக இருக்கும் என்பதும் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

மொத்ததில் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது முடிவுக்கு வரும் பட்சத்தில் தான் கச்சா எண்ணெய், பல முக்கிய தானியங்கள் என பலவற்றின் விலையும் குறைய வழிவகுக்கும். இது பணவீக்கம் குறைய வழிவகுக்கலாம். இது பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப வழிவகுக்கலாம். மொத்தத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் சமாதானம் மட்டுமே, பல்வேறு நாடுகளுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப வழிவகுக்கும். அது எப்போது என்பது தான் பெரும் கேள்வியாகவே எழுந்துள்ளது. இதே அணு ஆயுத பயன்படுத்தப்பட்டால் அது இன்னும் நிலைமையை பல ஆண்டுகளுக்கு மோசமாக்கலாம்.