ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. மொத்தம் 397 தபால் ஓட்டுக்கள் பதிவான நிலையில் அதனை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. அதன் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. மொத்தம் 15 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. மொத்தம் 397 தபால் ஓட்டுக்கள் பதிவான நிலையில் அதனை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்த நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 2ம் இடம் பிடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 62 ஓட்டுக்கள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு 35 தபால் ஓட்டுக்கள் பெற்று 2வது இடத்தில் உள்ளார் தேமுதிக, நாம் தமிழர் கட்சியினருக்கு ஒரு தபால் ஓட்டுக்கள் கூட கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளன.

மொத்தம் 16 மேஜைகளில் 15 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மதியத்துக்கு பிறகு ரிசல்ட் முழுவதுமாக தெரிந்துவிடும். ஓட்டு எண்ணிக்கையில் பிரச்சனைகள் ஏற்படாத வகையில் தடுக்கும் நோக்கத்தில் ஓட்டு எண்ணும் மையத்தை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 750க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.