ஈரோடு கிழக்கு தொகுதியில் பணநாயகம் வென்றது; ஜனநாயகம் தோற்றது என்று அதிமுக வேட்பாளர் தென்னரசு கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதலே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளரை விட 47 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இதனையடுத்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்தை விட்டு கோபமாக வெளியேறினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணநாயகம் தோற்று ஜனநாயகம் வென்றுள்ளது என்று குற்றம் சாட்டினார். அவ்வளவுதான் வேறொன்றும் இல்லை என்றும் தென்னரசு கூறி விட்டு சென்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், நீங்கள் தோற்றுவிடுவீர்கள் என்று முன்பே தெரியும் என்று கூறினார். தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நாளில் வாக்களித்து விட்டு வந்த தென்னரசு, தேர்தல் சுமூகமாக நடைபெற்றதாக கூறினார். இன்றைக்கு ஏன் இப்படி மாற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.