எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரேமலதா கண்டனம்!

எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 11-ந் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் வந்தார். அப்போது அவர் பேருந்தில் ஹேங்கரில் இருந்து திரும்பி செல்கையில், உடன் வந்த அமமுக நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ எடுத்தார். அதிமுகவை அழித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றஞ்சாட்டி அவர் வீடியோ எடுத்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியை சேர்ந்த ராஜேஸ்வரன் இப்படி நடந்து கொண்டதை பார்த்து எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார். அவரை எடப்பாடி சமாதானம் செய்ய முயன்றும் சமாதானம் ஆகவில்லை. இதை செல்போன் மூலம் வீடியோ எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து எடப்பாடி பாதுகாலவர் ராஜேஸ்வரனை தாக்கினார். அதோடு அவரின் செல்போனையும் பறித்தார். இதையடுத்தே எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. அதோடு விமான பயணியை தாக்கிய வழக்கு மட்டுமின்றி செல்போன் திருட்டு வழக்கும் அவர் மீது போடப்பட்டு உள்ளது.

இதை பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை. அரசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. எல்லா இடங்களிலும் போதை பொருட்கள் விநியோகம் அதிகரித்து உள்ளது. மாணவர்கள் அதிக அளவில் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாடு சட்ட ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் திருட்டு வழக்கு போட்டு உள்ளனர். என்ன கொடுமை இது. முன்னாள் முதல்வர் மீது இப்படியா வழக்கு போடுவார்கள். இந்த அரசு ஏன் இப்படி இருக்கிறது. இந்த அரசு கீழ்த்தரமாக இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் இந்த சம்பவம்தான். இவர்கள் வழக்கு போட நினைத்து இருந்தால் வேறு விஷயங்களில் போட்டு இருக்கலாம். பல விஷயங்கள் சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் எல்லாம் வழக்கு போடாமல் இவர்கள் ஏன் செல்போன் திருட்டு வழக்கை போடுகிறார்கள். இது மிக மோசமான செயல் என்று குறிப்பிட்டு உள்ளார்.