அசத்தப்போவது யாரு புகழ் கோவை குணா காலமானார்!

கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு என சின்னத்திரையில் ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த கோவை குணா உடல் நலக் குறைவால் காரணமாக காலமானார். உடல் நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கோவை குணா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கோவை குணா ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர் என்பதை யாருமே மறக்கமாட்டார்கள். கொரோனா நோய் பரவல் தொடங்கிய நேரத்திலேயே சொந்த ஊரான கோவைக்கே சென்று செட்டில் ஆகி விட்டார் கோவை குணா. கலக்கப் போவது யாரு மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் காமெடி செய்து ரசிகர்களை வார வாரம் சிரிக்க வைத்த கோவை குணா, உடல் நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கோவை குணா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கலக்கப் போவது யாரு முதல் சீசன் டைட்டில் வின்னராக ஆன கோவை குணாவுக்கு சினிமாவில் அதிகமாக வாய்ப்புகள் குவியவில்லை. சென்னை காதல் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் மற்றும் கவுண்டமணி போல மிமிக்ரி செய்து அசத்துவதில் கெட்டிக்காரர் கோவை குணா. ரசிகர்களை பல ஆண்டுகள் சிரிக்க வைத்து வந்த கோவை குணா திடீரென உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், மதுரை முத்து உள்ளிட்ட அவருடன் இணைந்து பணியாற்றிய காமெடி நடிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கோவை குணாவின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் தற்போது பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.