பாஜகவை 2024 மக்களவைத் தேர்தலில் வீழ்த்திவிட முடியும் என்று சொல்ல முடியாது: பிரசாந்த் கிஷோர்

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் மட்டுமே பாஜகவை 2024 மக்களவைத் தேர்தலில் வீழ்த்திவிட முடியும் என்று சொல்ல முடியாது என பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது ஒரு முகப்புத்தகத்தை போன்றது. வெறும் கட்சிகளையும் தலைவர்களையும் ஒன்றிணைப்பதால் மட்டும் அது சாத்தியப்படாது. நீங்கள் பாஜகவிற்கு சவால் விட வேண்டும் என்றால் அதன் பலத்தை அறிந்துகொள்ள வேண்டும். இந்துத்துவம், தேசியவாதம் மற்றும் நலத்திட்டங்கள் ஆகியவை பாஜகவின் 3 தூண்கள். இந்த மூன்றில் 2 நிலைகளையாவது நீங்கள் கடக்க வேண்டும். அவ்வாறு செய்யமுடியாவிட்டால் உங்களால் பாஜகவுக்கு சவால்விட முடியாது. இந்துத்துவத்தை எதிர்த்து போராடுவதற்கு கொள்கைவாதிகளின் கூட்டணி வேண்டும். காந்திவாதிகள், அம்பேதகரியவாதிகள், பொதுவுடைமையாளர்கள், கம்யூனிஸ்டுகள் ஒன்று சேர வேண்டும்.

கொள்கை என்பது மிகவும் முக்கியம். அதே நேரம் கொள்கை என்ற பெயரால் கண்மூடித்தனமாக செயல்படக்கூடாது. ஊடகங்களில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைவதை பார்க்கிறீர்கள். யார் யாரோடு மதிய உணவு சாப்பிடுகிறார்கள். தேனீர் குடிக்க யாரை அழைக்கிறார்கள் என்பதை கொள்கையின் உருவாக்கமாக பார்க்கிறேன். பாஜகவை வீழ்த்த ஒரே வழி கொள்கை ரீதியான கூட்டணி அமையாத வரை, பாஜகவை வீழ்த்துவதற்கு வேறு வழியே கிடையாது. நாம் மகாத்மா காந்தியின் கொள்கையை பின்பற்றுபவன். பீகாரில் நான் மேற்கொள்ளும் ஜன் சுராஜ் யாத்ரா, காந்தியின் காங்கிரஸில் சித்தாந்தத்தை புதுப்பிக்கும் முயற்சியாகும். இதன் மூலம் மாநிலத்தில் புதிய அரசியல் சூழலை உருவாக்குவேன். இந்த யாத்திரை பீகாரின் இலக்குகளையும் அதன் மீதான மதிப்பீடுகளையும் மாற்றும். சாதி ரீதியிலான அரசியல் உட்பட பல்வேறு தவறான காரணங்களால் அறியப்படுகிறது பீகார். பீகார் எதற்கான மாநிலங்கள், அம்மாநிலத்தின் மக்களின் ஆற்றல் என்ன என்பதை காட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது.

காங்கிரஸை மறுகட்டமைப்பு செய்ய நான் விரும்பினேன். தேர்தலில் வெற்றிபெறுவதே காந்தி குடும்பத்தின் குறிக்கோள். எனது யோசனைகளை அவர்கள் விரும்பும் வழியில் செயல்படுத்த நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை எடுத்துக்கொண்டால், நாடு தழுவிய அவர் மேற்கொள்ளும் பயணமே உண்மையான சோதனையாக இருக்கும். யாத்திரை என்றால் என்ன? யாத்திரை என்பது நடப்பது மட்டும் கிடையாது. அந்த 6 மாத கால ஒற்றுமை யாத்திரையில் ஏராளமான நற்பெயர்களும், ஏராளமான விமர்சனங்களும் வந்தன. 6 மாத யாத்திரைக்கு பிறகு ஏதாவது மாற்றத்தை கண்டீர்களா? அந்த யாத்திரை தேர்தலில் கட்சி மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்காகவே நடைபெற்றது. யாத்திரை என்பது ஒரு பகுதியை புரிந்துகொள்வதாக இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.