நடிகை ராய் லக்ஷ்மி தனது 34வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
1984ம் ஆண்டு மே 5ம் தேதி கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காமில் ராம் ராய் மற்றும் மஞ்சுளா ராய்க்கு மகளாக பிறந்தவர் ராய் லக்ஷ்மி. லக்ஷ்மி ராயாக 2005ல் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமான இவர், சரியாக படங்கள் ஓடுவதில்லை என்பதால், நியூமராலஜி படி தனது பெயரை ராய் லக்ஷ்மி என மாற்றிக் கொண்டார். கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் என்பது போல பெயரை மாற்றியும் பெரிதாக ராய் லக்ஷ்மிக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. கிரிக்கெட் வீரர் தோனியின் காதலி என கிசுகிசுக்கப்பட்ட ராய் லக்ஷ்மி அஜித்தின் மங்காத்தா, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து கலக்கினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வந்தாலும் இன்னமும் அவரால் டாப் ஹீரோயினாக வலம் வர முடியவில்லை. அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி போட்டோக்களை பதிவிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து வருகிறார்.
கடந்த ஆண்டு தி லெஜண்ட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராய் லக்ஷ்மி இந்த ஆண்டு போலா இந்தி படத்தில் அஜய் தேவ்கனுடன் நடித்திருந்தார். மேலும், ஆனந்த பைரவி எனும் தெலுங்கு படத்திலும் கேங்ஸ்டர் 21 என்கிற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க முடியவில்லையே என்றெல்லாம் நடிகை ராய் லக்ஷ்மி பெரிதாக கண்டு கொள்வதே இல்லை. கிடைக்கும் படங்களில் தனது போர்ஷனை கச்சிதமாக நடித்துக் கொடுத்து வருகிறார். கவர்ச்சி நடிகை ராய் லக்ஷ்மி தனது 34வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
