சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் கொள்கையும் உத்வேகத்தை அளிக்கின்றன: பிரதமர் மோடி!

சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் கொள்கையும் உத்வேகத்தை அளிக்கின்றன எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் உள்ள ராய்காட் கோட்டையில் மராட்டிய வாரியர் மன்னரின் முடிசூட்டு விழாவின் 350வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் மாநில அளவிலான விழாவில் விடியோ செய்தியில் பிரதமர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

சத்ரபதி சிவாஜியின் ஆட்சியில் அரசு மற்றும் மக்களின் நலன் அடிப்படைக் கொள்கையாக இருந்தது. அவரது முடிசூட்டு விழாவின் ஆண்டு விழா உத்வேகம் மற்றும் ஆற்றல் அளிப்பதாகவும், இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒரு தலைவரின் முக்கிய நோக்கம் தன் மக்களை உந்துதலாக வைத்திருப்பதுதான். மக்களிடையே அடிமைத்தனத்தை நீக்கி, அரசையும் படையெடுப்பாளர்களிடமிருந்தும் பாதுகாத்து சுயராஜ்ஜியத்தின் நம்பிக்கையை மக்களிடையே ஊக்குவித்தவர் சத்ரபதி சிவாஜி. அவரது வாழ்க்கை தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.