ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்: நடிகர் யாஷ்!

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் நடிகர் யாஷ்.

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது. மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் யாஷ், “ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தை நினைக்கும் போது, என் இதயம் எப்படி நொறுங்கியது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மீட்பு பணிகளுக்கு உதவியவர்களுக்கு என் நன்றிகள்” என்று சோகமாக பதிவிட்டுள்ளார்.