பிரதமரிடமும், ரயில்வே அமைச்சரிடமும் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன: காங்கிரஸ்!

ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும் நிறைய கேள்விகள் கேட்க உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒடிசாவில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்துகளில் இதுவும் ஒன்று. இந்த தருணத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்யுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒடிசா விரைந்துள்ளனர். மேலும், பலரும் ஒடிசாவுக்கு செல்ல உள்ளனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் நரேந்திர மோடியிடமும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும் கேட்பதற்கு எங்களிடம் நிறைய கேள்விகள் உள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்பதே உடனடி கடமையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.