வேலூரில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு

பேரணாம்பட்டில் 5 நிமிட இடைவெளியில் இரு முறை நில அதிர்வு.

வேலூரில் 3 ஆவது முறையாக நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது, சுமார் 3 வினாடிகள் நீடித்ததாக தகவல்.

இதுதொடர்பாக வருவாய் துறையினர் அங்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் அருகே பேரணாம்பட்டில் இரண்டு முறை நில அதர்வு உணரப்பட்டதாகவும், சுமார் 3 விநாடிகள் வரை நில அதர்வு நீடித்ததாகவும் அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களிடையே அச்சம் நிலவி வருகிறது. முன்னதாக கடந்த 23-ம் தேதி வேலூரில் இருந்து 50 கி.மீ மேற்கு வடமேற்கு பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 3.5 புள்ளிகளாக பதிவானது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

முன்னதாக கடந்த மாதம் 29-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் இதேபோன்றதொரு நில அதிர்வை உணர்ந்துள்ளனர். கடந்த 21-ம் தேதி இதே பேரணாம்பட்டு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தைச் சுற்றி ஏற்பட்டு வரும் நில அதர்வு சம்பவங்கள் அப்பகுதி மக்களை அச்சம் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வருவாய் துறையினர் முறையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.