முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும்: கஸ்தூரி

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ‘முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும்’ என்று நடிகை கஸ்தூரி சர்ச்சையாக பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். அதில், “முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும். CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே. ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே. கஸ்தூரியின் latest பழமொழிகள், இடுக்கண் வருங்கால் நகுக. இன்கம்டாக்ஸ் ரெய்டு வருங்கால் அழுக. பிரிக்க முடியாதது அரசியல்வாதியும் நெஞ்சுவலியும். பிரிய கூடாதது பாட்டிலும் பத்து ரூபாயும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், “செந்தில் பாலாஜி எவ்வளவு துடிக்கிறார். ரெய்டு போகும்போது ED IT அதிகாரிகளோடு டாக்டரும் அவசியம். இந்திய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பலவீனமான இதயம் உள்ளது. சிறைச்சாலைகளில் இதயத்திற்கு என சிறப்பு சிகிச்சை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். காவலர்கள் CPU இல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். போலீஸ் ஜீப்பிற்கு பதிலாக, ஆம்புலன்ஸ் பயன்படுத்துவது நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.