விஜய்யின் பர்த்டே செலப்ரேஷனில் அஜித், சூர்யா இருக்கும் போஸ்டர் வைரல்!

விஜய்யின் 49வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், விஜய்யின் பர்த்டே செலப்ரேஷனில் அஜித், சூர்யா இருக்கும் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கோலிவுட்டின் டாப் ஹீரோக்களின் ஒருவரான விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகிறார்கள். அதேபோல், லியோ படக்குழுவும் அடுத்தடுத்து அப்டேட் வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறது. விஜய்யின் லியோ படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய் தனது பிறந்ததினத்தை எப்போதுமே சிம்பிளாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் தான் இந்த வருடமும் ரொம்பவே சைலண்டாக பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில், விஜய்யுடன் அஜித்தும் சூர்யாவும் கேக் வெட்டி பர்த்டே செலப்ரேட் செய்யும் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. விஜய்யின் வலது பக்கம் அஜித்தும், இடது பக்கம் சூர்யாவும் இருக்கின்றனர். அஜித், சூர்யா நடுவே கேக் வெட்ட ரெடியாக இருக்கிறார் தளபதி விஜய். மூவருமே செம்ம ஸ்டைலிஷாக கோட் சூட் அணிந்து கெத்து காட்டுகின்றனர். ஆனால், இது விஜய் அஜித் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட பேன்மேட் போஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த போஸ்டரை ரசிகர்கள் அனைவரும் வைரலாக்கி வருகின்றனர். விஜய்யின் பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டர் வெளியானது பலருக்கும் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.