வள்ளலாரை சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி, வள்ளலார் 10,000 ஆண்டுகால சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என புகழ்ந்துள்ளார். ஆளுநர் ரவியின் இந்த பேச்சு கடும் அதிர்வலைகளையும் விவாதத்தையும் உருவாக்கி உள்ளது. சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார். ஆனால் ஆளுநரோ சனாதன தர்மத்தின் உச்சநட்சதிதிரம் என்கிறார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
“மதித்த சமயதம் வழக்கெல்லாம் மாய்ந்தது, வர்ணாசிரமெனும் மயக்கமும் சாய்ந்தது” என்று சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சநட்சத்திரம் என்கிறார் ஆளுநர். ஆளுநர் அவர்களே! வள்ளுவரும் வள்ளலாளரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள். மட்டுமல்ல சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார்.