முதலில் ஊழல்வாதிகள் என்று தாக்குங்கள் பிறகு அவர்களையே ஆரத்தழுவிக்கொள்ளுங்கள்: கபில் சிபல்

“முதலில் ஊழல்வாதிகள் என்று தாக்குங்கள் பிறகு அவர்களையே ஆரத்தழுவிக்கொள்ளுங்கள்” – என்று என்சிபி பிளவு குறித்து பாஜகவை விமர்சித்துள்ளார் மாநிலங்களவை உறுப்பினரான கபில் சிபல். மேலும் அமெரிக்க காங்கிரஸில் பேசிய மோடி “ஜனநாயகத்தின் தாய்” என்று இந்தியா பற்றி கூறியதன் அர்த்தம் இதுதானோ என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் பாஜகவை கடுமையாக விமர்ச்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

முதலில் ஊழல்வாதிகளைத் தாக்கிப் பேசுங்கள். பின்னர் அவர்களை ஆரத்தழுவிக் கொள்ளுங்கள். முதலில் அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று உத்திரவாதம் கொடுங்கள். பின்னர் அவர்களிடம் ஆதரவுக்கான உத்திரவாதத்தைப் பெறுங்கள். விசாரணை நிறுத்தப்பட்டது. இனி அமலாக்கத்துறை, சிபிஐ பதற்றம் இல்லை. இப்படித்தான் ஜனநாயகத்தின் தாய் வேலை செய்கிறதோ?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.