இஸ்ரேல் பாதுகாப்பு படையினர்- பாலஸ்தீனர்கள் இடையே மோதல்!

இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் – பாலஸ்தீனர்கள் இடையே நடந்த மோதலில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 22-ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் , பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது லாவிட் ஷெரீப் என்ற 21 வயதான பாலஸ்தீன இளைஞர் படுகாயமடைந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த லாவிட் ஷெரீப் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து, உயிரிழந்த ஷெரீப்பின் உடல் அல் அக்சா இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டு பின்னர் ஜெருசலேம் பழைய நகர் பகுதியில் அடக்கம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, பாலஸ்தீனர்கள் சிலர் இஸ்ரேலிய படையினர் மீது கற்கலையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையும் வீசினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 77 பேர் காயமடைந்தனர்.