தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், மது இல்லாத தமிழகம் என்பது பாரதிய ஜனதாவின் கனவு மட்டுமல்ல தமிழக மக்களின் விருப்பமும் கூட. அதை நிறைவேற்ற பாஜக தகுந்த ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வகுத்துள்ளது. இது குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.
இது தொடர்பாக பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு தங்களை சந்தித்து திட்டத்தின் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. வரும் ஜூலை 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி அல்லது இந்த மாதத்தில் ஏதாவது ஒரு நாளில் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.