பாஜகவின் பிரித்தாளும் கொள்கையால் மணிப்பூர் பாதிப்பு: கனிமொழி!

பாஜகவின் பிரித்தாளும் அரசியலால் இந்த நாடு உண்மையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி எம்பி வேதனை தெரிவித்தார்.

மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம் பெண்கள் இருவர் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியானது.100க்கணக்கான ஆண்கள் இரண்டு பெண்களை நாசம் செய்த வீடியோவை பார்த்து நாடே கொதித்து போய் இருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது.

இந்நிலையில் மணிப்பூர் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

மணிப்பூரில் இரண்டு பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது கொடூரமான செயல். இத்ந சம்பவம் என்னை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. பாஜகவின் பிரித்தாளும் அரசியலால் இந்த நாடு உண்மையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு அமைதிக்கான நடவடிக்கை எடுப்பதிலோ, அங்கு நிலைமையை சீராக்க சரியான நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. இந்த விவாகரத்தில் மத்திய பாஜக அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான குறைப்பாடு அப்பட்டமாக தெரிகிறது. மணிப்பூரில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் கண்டிப்பாக எடுக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.