மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி மகிளா காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரத்தை கண்டித்தும், மணிப்பூர் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் மகிளா காங்கிரஸ் சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகிய சில நிமிடங்களில் மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் குறித்த அறிவிப்பை தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணமாக்கி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததைக் கண்டித்தும், மணிப்பூர் பா.ஜ.க. அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், நாளை (22.07.2023) சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் சென்னை, அண்ணா சாலை தர்கா அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.