‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கம்?

‘விக்ரம்’ நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்திலிருந்து தூக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தினை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. விக்ரம், கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் டிரெய்லர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றிருந்தது. இதனையடுத்து தற்போது மீண்டும் ரிலீசுக்கு தயாராகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்திலிருந்து தூக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் வெளியான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது பாடலின் யூடியூப் பக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் நீக்கப்பட்டுள்ளதால், படத்தில் அவரது காட்சிகள் தூக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக விக்ரமின் ‘மகான்’ படத்தில் வாணி போஜன் சம்பந்தமான காட்சிகள் நீக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் தூக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லாத வகையில் கதையில் சில மாற்றங்கள் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.