புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரிய தீர்மானத்துக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஒப்புதல் அளித்து உள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை தனிமாநிலமாக மாற்ற வேண்டும் என்பது அங்குள்ள பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவையில் தனி மாநில தீர்மானத்தை அம்மாநில அரசு நிறைவேற்றியது. ஆனால், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தற்போது தீர்மானத்துக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.