இணையற்ற பேரரசர்.. ஏற்ற இறக்கங்களை பார்த்தவர்: ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல் திரையுலகில் நடிகராக 64 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது தொடர்பாக ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கமல். சினிமாவில் இவர் தொடாத எல்லைகளை இல்லை எனலாம். உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல், சினிமாவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போதைய தமிழ் திரையுலகில் உள்ள பல இயக்குனர்களுக்கு வழிக்காட்டியாகவும் திகழ்கிறார் கமல். இவரை பார்த்தே சினிமாவில் படம் இயக்க பலர் வந்துள்ளனர்.

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய பல மொழிகளில் ஏராளமான பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, பாடகர், நடன இயக்குனர், பாடாலாசிரியர், மேக்கப் கலைஞர் என சினிமாவில் இவர் தடம் பதிக்காத துறையே இல்லை.

இந்நிலையில் கமலில் முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மா’ கடந்த 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியானது. இதன் அடிப்படையில் கமல் தற்போது திரையுலகில் 64 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஏற்ற இறக்கங்கள் வெற்றிகள் மற்றும் சவால்கள் என அனைத்தையும் பார்த்தவர். இவை எதுவுமே உலக நாயகனுக்கும் அவரது சோர்வே இல்லாத முயற்சிக்கும் இடையில் வராது. 6 தசாப்தங்களின் இந்த இணையற்ற பேரரசர் சினிமாவில் 64 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்’ என பதிவிட்டுள்ளார்.