குஷி பட நிகழ்ச்சி மேடையில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் டான்ஸ் ஆடியதை பார்த்தவர்கள் அந்த இருவருக்கும் இடையோன கெமிஸ்ட்ரி பற்றி தான் பேசி வருகிறார்கள்.
விஜய் தேவரகொண்டா, சமந்தா உள்ளிட்டோர் நடித்திருக்கும் குஷி படம் செப்டம்பர் 1ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் குஷி படத்தை ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். இந்நிலையில் ஹைதராபாத்தில் குஷி இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது. அதில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் சேர்ந்து ரொமான்டிக்காக டான்ஸ் ஆட அதை பார்த்து அங்கிருந்த அனைவரும் அசந்துவிட்டார்கள்.
சமந்தாவை அலேக்காக தூக்கி சுற்றினார் விஜய் தேவரகொண்டா. சமந்தா, விஜய் தேவரகொண்டா இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கிறது என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். விஜய் தேவரகொண்டாவை சமந்தா பார்த்த விதம். சமந்தாவை விஜய் அழகாக தூக்கியது எல்லாம் பார்த்தால் செமயமாக இருக்கிறது. இந்த கெமிஸ்ட்ரிக்காகவே படம் வெற்றி பெறும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
குஷி படத்தில் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, லட்சுமி, ரோஹினி, ஜெயராம், அலி, ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. குஷிக்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.
குஷி நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா கூறியதாவது:-
சமந்தா முகத்தில் சிரிப்பை பார்க்க விரும்புகிறேன். இந்த படத்திற்காக அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எங்கள் முகங்களில் புன்னகையுடன் குஷி படப்பிடிப்பை துவங்கினோம். 60 சதவீத காட்சிகளை படமாக்கிவிட்டோம். 30 முதல் 35 சதவீத காட்சிகள் தான் பாக்கி. ஜூலை மாதம் சாமின் உடல்நிலை மோசமானது. எனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறினார் சமந்தா.
நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை என நானும், சிவாவும் சமந்தாவிடம் கேட்டோம். சமந்தா சீரியஸாக சொல்கிறார் என்பது முதலில் எங்களுக்கு புரியவில்லை. அதன் பிறகே அவரின் நிலைமை புரிந்தது. ஜூலை மாதம் என் இன்னொரு படத்தை விளம்பரம் செய்தபோது தான் சமந்தாவின் உடல்நலம் பற்றி தெரிய வந்தது. முதலில் அது பற்றி சாம் பேசவில்லை. நாம் நடிகர்கள், கதை சொல்பவர்கள் என சமந்தாவிடம் கூறினேன். நம் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசக் கூடாது என நான் நினைத்தேன்.
ஒரு கட்டத்தில் தன் உடல்நலம் பற்றி பேச வேண்டும் என நினைத்தார் சமந்தா. எங்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். மேலும் எங்களை சந்திப்பதையும் நிறுத்திவிட்டார் சாம். அவருக்கும் உடல்நலம் ரொம்ப மோசமாக இருந்தது. அவர் பல பிரச்சனைகளுடன் போராடினார். அந்த நேரத்தில் அது குறித்து அனைவரிடமும் சொல்ல முடிவு செய்தார். எதுவாக இருந்தாலும் நம்மால் எதிர்கொள்ள முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்த தன் பிரச்சனையை வெளியே சொன்னார் என்றார்.