டெல்லி செங்கோட்டைக்கு அழைத்துச் சென்று அங்கு உண்ணாவிரதம் இருக்க விளையாட்டு அமைச்சர் உதயநிதிக்கு தில் உண்டா? அறிவிக்க தயாரா? என்று த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.
த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் ஒன்று உண்டு. அந்த பாடலுக்கு முழு சொந்தக்காரர்கள் திமுகவினர். பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பின் நீட் தேர்வை ரத்து செய்யும் முதல் கையெழுத்து என்று அறிவித்து இன்று வரை நடவடிக்கை எடுக்காமல் அதை மறைப்பதற்கு போடும் கபடநாடகத்தின் ஒரு அங்கம் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம்.
உண்ணாவிரதம் என்னும் கபடநாடகத்தை கைவிட்டு விடுவதே விளையாட்டு அமைச்சர் உதயநிதி எதிர்காலத்துக்கு நல்லது. அப்படி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றால் உங்களுடைய கூட்டணிக் கட்சிகள் உட்பட பார்லிமென்ட் 38 எம்.பி.,க்களையும் டெல்லி செங்கோட்டைக்கு அழைத்துச் சென்று அங்கு உண்ணாவிரதம் இருக்க விளையாட்டு அமைச்சர் உதயநிதிக்கு தில் உண்டா? அறிவிக்க தயாரா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.