வெறுப்பு வெறுப்பினை மட்டுமே பார்க்கும். நகைச்சுவை புரியவில்லை என்றால் நீங்கள்தான் நகைச்சுவையே என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
நிலவில் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-3 விண்கலம், ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. தற்போது நிலவையொட்டிய சுற்றுப்பாதையில் லேண்டர் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் அனுப்பிய படம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டலாக டீ பதிவிட்டு இருந்தார். விக்ரம் லேண்டர் எடுத்த முதல்படம் என டீ ஆத்தும் புகைப்படம் ஒன்றினை கிண்டலாக பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க அதற்கு விளக்கமளித்துள்ளார். இதில், “வெறுப்பு வெறுப்பினை மட்டுமே பார்க்கும். ஆர்ம்ஸ்ட்ராங் காலத்து நகைச்சுவையினை கூறியிருந்தேன். கேரள டீக்கடைகாரரை கொண்டாடியுள்ளேன்.. எந்த டீ விற்பவருக்கு இது கேலியாக தெரிகிறது? நகைச்சுவை புரியவில்லை என்றால் நீங்கள்தான் நகைச்சுவையே. வளருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.