மத்திய பிரதேசத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்காதது ஏன்?: பிரியங்கா காந்தி!

ம.பியில் பாஜ.க, ஆட்சியில் 250க்கு மேற்பட்ட ஊழல்கள் நடந்துள்ளன. ஆனால் அமலாக்கத்துறை ரெய்டு நடக்காதது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பேசினார்.

மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது:-

அண்டை நாடுகளில் ஜனநாயகம் வலுவாகக் கருதப்பட்ட நாடாக இருந்ததால், நம் நாட்டைப் பற்றி நாங்கள் பெருமை கொள்கிறோம். அவர்களுக்கு எதிராக (பாஜ.க) செயல்பட்டால் அமலாக்கத்துறை உடனடியாக சென்றடைகிறது. பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் ம.பி மாநிலம் தார் நிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். பிகார் அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் 18 ஆண்டுகால பாஜ.க, ஆட்சியில் 250க்கும் மேற்பட்ட ஊழல்கள் நடந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் பல ஊழல்கள் நடந்த அதிகாரிகள் வீடுகளுக்கு அமலாக்கத்துறை ஏன் வரவில்லை?. குறிப்பாக அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் ஸ்காலர்ஷிப் உள்ளிட்டவற்றில் ஊழல் செய்து வருகின்றனர். அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் எல்லா இடங்களுக்கும் விஜயம் செய்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.