நடிகர் அஜித்தின் விடாமுயற்சியில் பிரியா பவானி சங்கர்?

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகர்கள் ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.