விரைவில் வெளியாகிறது ‘தங்கலான்’ படத்தின் டீசர்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் பா. ரஞ்சித் தற்போது ‘தங்கலான்’ படத்தை இயக்கியுள்ளார். விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இப்படம் உருவாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியீடு குறித்து அதிரடியான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித்.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சமூக கருத்துள்ள படங்களை இயக்கி வரும் பா. ரஞ்சித், விக்ரம் இருவரும் ‘தங்கலான்’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் ஷுட்டிங் கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடந்து வந்தது. கோலிவுட் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக இப்படத்தின் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘தங்கலான்’ படம் குறித்த அசத்தலான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘தங்கலான்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் பா. ரஞ்சித். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பெரும் பொருட் செலவில் இப்படம் உருவாகியுள்ளது. கனத் சில மாதங்களாக இப்படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் பா. ரஞ்சித்.

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களிடம் பேசிய பா. ரஞ்சித்திடம் ‘தங்கலான்’ குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் சீக்கிரமே அப்டேட் வரும். இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ டீசரோட முக்கியமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. டீசர் எல்லாம் ரெடியாகிருச்சு. அதுனால அடுத்த வாரம் டீசரோட ‘தங்கலான்’ அப்டேட்டை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார் பா. ரஞ்சித்.

அநேகமான ரிலீஸ் தேதியுடன் இந்த டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ‘தங்கலான்’ படத்தில் விக்ரம், பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மற்றும் டேனியல் கால்டஜிரோனோ உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். கோலார் தங்க வயல் பின்னணியில் கேஜிஎப் குறித்த உண்மை வரலாற்றினை கூறும் விதமாக ‘தங்கலான்’ படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘தங்கலான்’ படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தங்கலான் சம்பவம் விரைவில்… அசத்தலான டீஸர் விரைவில் வெளியாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.