ஆம் ஆத்மியை விட காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. சிறிய அமைப்புகள் என என்னால் சவாலாகவே கூற முடியும்.
அவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் 10-ல் ஒரு பங்கு அளவு கூட கிடையாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
அரியானாவின் ரோத்தக் நகரில் நடந்த ஆம் ஆத்மி கட்சி கூட்டத்தில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசியதாவது:-
ஆம் ஆத்மியை விட காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. சிறிய அமைப்புகள் என என்னால் சவாலாகவே கூற முடியும்.
அவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் 10-ல் ஒரு பங்கு அளவு கூட கிடையாது என குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்களை எந்த கிராமத்திற்காவது சென்று, எங்கள் கட்சியில் சேருங்கள் என மக்களை அழைக்க சொல்லுங்கள். ஒருவரும் அவர்கள் கட்சியில் சேர முன் வரமாட்டார்கள்.
ஆனால், ஆம் ஆத்மி தொண்டர் ஒரு கிராமத்திற்கு சென்று, எங்கள் கட்சியில் சேருங்கள் என மக்களிடம் கூறினால், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகள் கூட, நாங்கள் ஆம் ஆத்மியில் சேர விரும்புகிறோம் என கூறுவார்கள். ஏன்? ஆம் ஆத்மி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.
ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக உருவாகியுள்ள எதிர்க்கட்சியான, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியையும் அவர் சாடி பேசியது அரசியலில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.