சோஷியல் மீடியாவில் வைரலாகும் சமந்தாவின் புகைப்படம்!

எக்ஸ் தளத்தில் சமந்தாவின் பெயர் டிரெண்டானதை பார்த்தவர்கள் ஏதோ புது புகைப்படம் வந்திருக்கிறது என நினைத்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கித்திற்கு சென்றார்கள். அந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் அசந்துவிட்டார்கள்.

மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்கான மேல் சிகிச்சை பெறுபவதற்காக படங்களில் நடிப்பதில் இருந்து 6 மாத காலம் பிரேக் எடுத்திருக்கிறார் சமந்தா. முதலில் கோவில் கோவிலாக சென்று பிரார்த்தனை செய்தார். அதன் பிறகு தோழியுடன் வெளிநாடுகளுக்கு சென்றார். சிகிச்சைக்காக அம்மாவுடன் அமெரிக்காவுக்கு சென்றார். இந்நிலையில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் சமந்தா. மேலும் அந்த பத்திரிகையின் அட்டைப்படத்திற்கும் போஸ் கொடுத்திருக்கிறார். அந்த பத்திரிகைக்காக கருப்பு நிற உடையில் தான் போஸ் கொடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சமந்தா.

போல்டாக போஸ் கொடுத்திருக்கும் சமந்தாவை பார்த்து அனைவரும் அசந்துவிட்டார்கள். அந்த புகைப்படத்தை பார்த்த நடிகைகள் காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாசன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டவர்கள் தீ எமோஜியை தட்டிவிட்டுள்ளனர். ரசிகர்கள் பலரும் தீ எமோஜியை தான் கமெண்ட் பாக்ஸில் போட்டிருக்கிறார்கள். செமயான புகைப்படம். இப்படி தில்லாக போஸ் கொடுக்க சம்முவால் தான் முடியும். அவர் கவர்ச்சியாக உடை அணிந்தபோதிலும் அது அவருக்கு க்யூட் அன்ட் ஹாட்டாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.