தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களில் டாஸ்மாக் விற்பனை ரூ. 467.63 கோடி!

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாள்களில் ரூ. 467.63 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாள்களில் மது விற்பனை வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும். இந்த நிலையில், தீபாவளியையொட்டி, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், சில தொழில் நிறுவனங்களுக்கு கடந்த சனிக்கிழமை முதல் தொடா்ந்து 3 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த தொடா் விடுமுறை காரணமாக தமிழகத்தில் அதிகளவில் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கடந்த 2 நாள்களில் மட்டும் ரூ. 467.63 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. சனிக்கிழமை(நவ.11) ரூ.221 கோடிக்கும், தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை(நவ.12) ரூ.246 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது. அந்த வகையில், தீபாவளிக்கு முந்தைய நாள் மதுரை மண்டலத்தில் ரூ.52.73 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில், தீபாவளி அன்று திருச்சி மண்டலத்திலும் ரூ. ரூ.55.60 கோடிக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதனால் 2 நாள்களில் தமிழகத்தில் மதுபான விற்பனை ரூ.467.63 கோடிக்கு நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு மது விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.