கங்கணா ரனாவத் சூட்டிங்கில் பங்கேற்று ரஜினிகாந்த் வாழ்த்து!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார் நடிகை கங்கணா ரனாவத். இந்நிலையில் பிரபல இயக்குநர் ஏஎல் விஜய்யின் அடுத்தப் படத்தில் கங்கணா ரனாவத் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு, படக்குழுவினருக்கும் கங்கணா ரனாவத்திற்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம்வந்துக் கொண்டிருப்பவர் நடிகை கங்கணா ரனாவத். பல அதிரடியான படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளவர். தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துள்ள இவர் சமீபத்தில் தலைவி மற்றும் சந்திரமுகி 2 படங்களிலும் நடித்து ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். சந்திரமுகி 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கங்கணாவின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது. முன்னதாக ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கணா நடித்திருந்த தலைவி படமும் சிறப்பாக அமைந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் ஏஎல் விஜய் இயக்கத்திலேயே தற்போது இணைந்துள்ளார் கங்கணா ரனாவத். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் கங்கணாவிற்கு ஜோடியாக நடிகர் மாதவன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் சில தினங்களில் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஏஎல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் சாப்டர் 1 என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் அடுத்தப் படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு, படக்குழுவினருக்கும் கங்கணா ரனாவத்திற்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் மாதவனுடன் இந்தப் படத்தில் கங்கணா ரனாவத் இணைந்துள்ளார். சைக்காலாஜிக்கல் த்ரில்லராக படம் உருவாகவுள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கனா ரனாவத், “படப்பிடிப்பு தளக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து எங்களை ஆச்சரியப்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த். என்ன ஓர் அற்புதமான தருணம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். நடிகை கங்கனா பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.