குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு: மன்சூர் அலிகான்!

நடிகை த்ரிஷாவை அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்த நிலையில் த்ரிஷா குறித்து பாலியல் ரீதியாக ஒரு கருத்தை பேசியிருந்தார். இது பெரும் பிரச்சினையாக மாறியது. இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதி ராஜா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்த நிலையில் அவரோ நான் மன்னிப்பு கேட்கும் ஜாதியா என்றெல்லாம் பேசினார். இந்த நிலையில் நேற்றைய தினம் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். அதை த்ரிஷாவும் ஏற்றார். இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பக்தனால் கடவுளின் மனம் குளிர்ந்தது. இனி விவசாயிகள் நிலம் பறிக்கப்படாது. நிலக்கரி சுரங்கத்திற்கென நிலம் புதிதாக எடுக்கப்படாது. 1% N.L.C. மின்சாரம். தமிழ்நாடு பயன்படுத்துகிறது. 1018% கர்நாடகம் செலவழிக்கிறது. சர்வே ரிப்போர்ட்.. கர்நாடகாவின் அனைத்து அணைகளும் நிரம்ம்ம்பி வழிகின்றன. தமிழக ஆறுகளின் அடி மட்ட மண் யாவும். கேரளா, கர்நாடகாவுக்கு டன், டன்னாய் லாரிகளில் விற்க்கப்படுகிறது. அழகான கடவுளின் மனம் குளிர்ந்தது.

தூத்துக்குடியில் 13 பேரை சுட்ட போலி..(லி) ஸார் கடவுள் தூக்கிலே போடும். காவிரி டெல்டா விவசாய மண் யாவும் மீற்கப்படும். நெடுவாசல் நிறைய சேரி மக்கள் போராடிக்கொண்டே இருக்க, அதானி துறைமுகங்களில், ஏர்போர்ட் வழியாக நித்தம் டன்டன்னாக தங்கமும், கோகனும் கடத்திவரப்பட்டு கள்ளச்சந்தையில் விற்று உலகின் No 1. பணக்காரர்.. அதானி, அம்பானி | நாம்.. அம்பாளை கும்பிடும் .. வெறும் அம்பாநீ.. உப்பு தின்றவன். தண்ணி குடிக்கனும். யாம் அனுப்பியது கடிதம் அல்ல. அறிக்கை!!

எமை ஆதரித்த யாவோரும்.. முதல் உதிர்த்த வார்த்தை மன்சூரலிகான் செய்த தவறு. எனவே இறையச்சத்தோடு வருந்த வேண்டும். முன்னுதாரணமாக திகழ.. வேண்டி. யாம் பத்திரிக்கைக்கு அனுப்பியது அறிக்கை. கடவுள் மனம் குளிர்ந்தது. 5 மாநிலத்தில் “கை” வெல்கிறது ஆறு மாதத்தில் “இ.ந்.தி.யா” வெல்கிறது.. Cast census மூலம் யாவோர்க்கும்.. வேலைவாய்ப்பு.. அழகிய கடவுளே பொதுச்சொத்தை அதானிக்கு விற்றவர்களை தண்டிப்பாயாக!. சேரிப் புயல் திருமா.. ஆதித்தமிழன் சமூகநீதி நிலைநாட்டிய அயோத்திதாஸ பண்டிதர் புகழ் ஓங்குக .. பாம்பை..? கண்டவனுக்கு மட்டுமல்ல.. அனைவர்க்கும் தர்ஷனம் தருவாயாக.. அரோகரா! யாம் அனுப்பியது கடிதம் அல்ல! என்று இந்த அறிக்கையில் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் தனது மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் உண்டு பண்ண, பொது அமைதியை 10 நாட்களாக கெடுத்து, மடைமாற்றம் செய்ய தூண்டிய அனைத்து பிரிவுகளிலும் வழக்குகள் எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் நாளை கோர்ட்டில் தொடுக்க உள்ளேன்!

11.11.2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பேசிய ‘உண்மை வீடியோவை’ தங்களுக்கு அனுப்பி உள்ளேன். இந்த வீடியோவைத்தான், சரியாக ஒருவாரம் கழித்து, 19.11.2023 அன்று சில விஷமிகளால் நான் பேசியவற்றில் முன்னே பின்னே எடிட் செய்யப்பட்டு, த்ரிஷாவை ஆபாசமாக பேசியதாக சித்தரிக்கப்பட்டது! உண்மை வீடியோவை உங்கள் பார்வைக்கு அனுப்பி உள்ளேன்! மேலும் சில ஆதாரங்களுடன் நாளை வழக்கு தொடுக்க உள்ளேன்! நன்றி! -நடிகர் மன்சூர் அலிகான். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.