விஷால் நடிப்பில் ‘ரத்னம்’ படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் ஷாட் டீசர்!

இயக்குனர் ஹரி மற்றும் விஷாலின் கூட்டணியில் புதிய படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் ஷாட் டீசர் வெளியாகியிருக்கிறது.

சாமி, கோவில், சிங்கம் போன்ற படங்களின் இயக்குனரான ஹரி இயக்கத்தில் விஷால் அவரது 34வது படத்திற்காக இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியானது. முன்னதாக விஷால் மற்றும் ஹரி இணைந்து தாமிரபரணி என்னும் மெகா ஹிட் படத்தை கொடுத்திருந்தார்கள். தாமிரபரணி திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அப்போதைய காலத்தில் ட்ரான்ட் செட்டராக இருந்தது. விஷால் மற்றும் இயக்குனர் ஹரியின் வெற்றிக் கூட்டணி 2014 ஆம் ஆண்டு பூஜை என்னும் படத்திற்காக இணைந்தது. இந்த படமும் விமர்சன ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக இப்போது விஷாலின் 34-வது படத்தில் இணைந்திருக்கிறது இந்த வெற்றி கூட்டணி.

விஷால் 34 என அழைக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு ரத்னம் என பெயரிட்டு இருக்கிறார்கள். இந்த படத்தை கார்த்திகேயன் சந்தானம் அவரது ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கிறார். மேலும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இந்த படத்தை அவர்களுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ரத்னம் படத்தின் பர்ஸ்ட் ஷாட் டீசர் நேற்று வெளியாகியிருக்கிறது. வழக்கம்போல ஹரி படத்தின் தரமும் கிராமத்து சூழ்நிலையும் அய்யனார் கோயில் அரிவாள் என பக்கா கிராமத்து கதையாக இந்த படம் இருக்கும் என்பது தெரிகிறது. நடிகர் விஷால் சமீப காலமாக கிராமம் சார்ந்த கதைகளில் நடிக்காமல் இருக்கிறார். மேலும் கடைசியாக விஷாலின் கிராமம் சார்ந்த படமாக 2018ல் சண்டக்கோழி 2 படம் வெளியானது. அதன் பிறகு கமர்சியல் படங்களில் நடித்து வரும் விஷாலின் கிராமத்து கதைக்கு ரத்னம் படம் ஜோஷான படமாக அமைந்திருக்கிறது.

இயக்குனர் ஹரியின் கிராமத்து மண்வாசனை, செம்மண் தரை, அய்யனார் கோயில் அரிவாள், ரத்தம் என ஆக்சன் காட்சிகளும் சென்டிமென்ட் காட்சிகளுக்கு இந்த படத்தில் பஞ்சம் இருக்கப்போவதில்லை. மேலும் இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரில் ஒரு பக்கம் அரிவாள் மற்றொரு பக்கம் டாக்டர்கள் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப் இருந்தது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. இந்த இரண்டுக்குமான கனெக்ஷன் குறித்து ஃபர்ஸ்ட் ஷார்ட் டீசரில் எந்த டீடைலும் காண்பிக்கப்படவில்லை. நடிகர் விஷால், இயக்குனர் ஹரி மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாதின் ரத்னம் கூட்டணி 2024 சம்மரில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.