மலையாள நடிகையான கல்யாணி ப்ரியதர்ஷன் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் இளைஞர்கள் மத்தியில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் பேசிய கல்யாணி ப்ரியதர்ஷன் எக்கச்சக்கமான அடி, உதை, ரத்த காயங்கள் வாங்கியிருப்பதாக கூறியிருக்கிறார்.
மலையாள சினிமாவில் நடிகையாக வளம் வருகிறார் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன். மலையாள இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிசியின் மகள்தான் கல்யாணி ப்ரியதர்ஷன். தெலுங்கு படமான ஹலோ படத்தின் மூலம் திரைக்கு என்ட்ரி கொடுத்த இவர், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக படங்களில் நடித்து வருகிறார். கலை இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய கல்யாணி ப்ரியதர்ஷன் தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்புகளை பெற்றதால் நடிகையாக மாறிவிட்டார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 2019 ல் வெளியான ஹீரோ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு புத்தம் புது காலை, மாநாடு ஆகிய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் கல்யாணி ப்ரியதர்ஷனின் ஆண்டனி திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது. இந்நிலையில் அவர் கொடுத்திருந்த ஒரு பெட்டியில் சில உருக்கமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இயக்குனர் ஜோஷி இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், வினோத் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ஆண்டனி. இந்த திரைப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் மார்ஷியல் கலையை கற்கும் ஒரு கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் எக்கச்சக்கமான சண்டை காட்சிகளும் இருக்கிறதாம். இந்த படத்தில் தான் வாங்கிய அடி, ரத்த காயங்கள், அழுத அழுகை என அனைத்துமே நிஜம் என கல்யாணி ப்ரியதர்ஷன் பேசியிருப்பது கவனத்தை கிளப்பியிருக்கிறது.
சண்டை காட்சிகள் அதிகமாக இருக்கும் படம் என்பதால் அதிகப்படியான அடி, உதை வாங்கியதாகவும் அதற்காக அவர் அதிகமாக அழுததாகவும் கல்யாணி ப்ரியதர்ஷன் பேசியிருக்கிறார். பொதுவாகவே சண்டை காட்சிகளுக்கு டூப் போடுவது வழக்கம் ஆனால், இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் பல சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார்.
ஆண்டனி திரைப்படத்தில் சிரிப்பு, அழுகை என அனைத்து எமோஷனும் இருக்கிறது, அந்த வகையில், தான் அந்த படத்தில் செய்த ஒவ்வொன்றுமே நிஜம் என பேசியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் எப்போதுமே வசதியான சூழ்நிலையில் நம்மை வைத்துக் கொள்வது நம்மை வளர்ச்சியடைய வைக்காது, இந்த விஷயத்தை மிகவும் தாமதமாக தான் புரிந்து கொண்டதாகவும் கல்யாணி பகிர்ந்திருக்கிறார். மலையாளத்தில் கடந்த டிசம்பர் 1 ரிலீஸான ஆண்டனி திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் நல்ல வரவேற்போடு ஓடிக்கொண்டிருக்கிறது.