கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான தினசரி பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் ஒமைக்ரான் வகை கொரோனாவின் மாறுதலான ஜேஎன் 1 வகை கொரோனா பரவுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வகை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடியது என்பதால், சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.