டி. ராஜேந்தர் உடல்நலம் முடியாமல் வெளிநாட்டுக்குச் சென்று தீவிர சிகிச்சை பெற்று திரும்பியுள்ள நிலையில், எந்தவொரு நிகழ்ச்சிக்கும் செல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்த நடிகர் சிம்பு வெளிநாட்டில் தான் இருப்பதால் நேரில் செல்ல முடியாத சூழல் காரணமாக தனது தந்தையை கட்டாயமாக போய் பார்த்து இறுதி மரியாதை செய்ய சொல்லி உள்ளார்.
விஜயகாந்த் மறைவு ஒட்டுமொத்த தேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பிரதர் மோடி முதல் மலையாள நடிகர்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு முன்பாக பல ஆயிரக் கணக்கான மக்கள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிம்பு எக்ஸ் தளத்தில், “இதயமே நொறுங்கி விட்டது.. என்னோட அண்ணன் விஜயகாந்த் மறைவு செய்தியை கேட்டு ரொம்பவே வேதனை அடைந்துள்ளேன். ரீலிலும் ரியலிலும் அவர் தான் நிஜ ஹீரோ, அவரோட இடம் எப்போதுமே தமிழ் சினிமாவிலும் தமிழ்நாட்டிலும் தனித்து நிற்கும்” என நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் டி. ராஜேந்தர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து டி.ராஜேந்தர் விஜயகாந்த் மறைவு தனக்கு மிகவும் மனவேதனையை அளித்துள்ளதாக கூறினார். மேலும், அப்பா நான் வெளிநாட்டில் இருக்கேன், என்னால வர முடியாது நீங்க எப்படியாவது அண்ணன் விஜயகாந்தை நேரில் சென்று பார்த்து விட்டு வந்துடுங்க அப்பா என என்னை இங்கே அனுப்பியதே என் மகன் சிம்பு தான். சினிமாவில் அறிமுகமான காலக்கட்டத்தில் சிம்புவுக்கு பல உதவிகளை செய்தவர் கேப்டன் விஜயகாந்த். அவரை ஒரு நடிகராகவோ, அரசியல் தலைவராகவோ எல்லாம் நினைத்து இங்கே பார்க்க வரவில்லை. அதையெல்லாம் தாண்டி விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர். அந்த மனிதருக்கு செலுத்த வேண்டிய இறுதி கடமையை செலுத்தவே வந்தேன் என டி. ராஜேந்தர் பேசியுள்ளார்.