ட்ரோன் துறையில் இந்தியா முன்னேறுகிறது: பிரதமா் மோடி

ட்ரோன் என்​கிற ஆளில்லா விமா​னத்​தின் தொழில்​நுட்​பம் தொடா்​பாக காணப்​ப​டும் ஆற்​ற​லும், உற்​சா​க​மும் உல​கின் மிகப்​பபெரிய நிபு​ண​ராக மாறு​வ​தற்​கான வேகத்​தில் இந்​தியா முன்னேறு​கி​றது என்று பிர​த​மா் மோடி குறிப்​பிட்​டாா்.

டெல்லி பிர​கதி மைதா​னத்​தில் ‘பாரத் ட்ரோன் மேஹாத்​ச​ஸவ் 2022’ என்ற நாட்டின் மிகப் பெரிய ட்ரோன் திரு​விழா நேற்று தொடங்​கி​யது. 2 நாள் நைடபெ​றும் இந்​தத் திரு​வி​ழா​வில் வெளி​நாட்​டுப் பிர​தி​நி​தி​கள், அரசு அதிகா​ரி​கள், முப்​படையி​னா், மத்​திய ஆயு​தப்​படை​யி​னா், பொதுத்​துறை, தனி​யாா் துறையி​னா், ட்ரோன் தொழில் முனைவோர் என சுமாா் 1,600 போ் கலந்து கொண்​ட​னா். இந்த விழாவை தொடக்கி வைத்​துப் பிர​த​மா் மோடி பேசி​ய​தா​வது:-

நான் இந்த ட்ரோன்​க​ளின் கண்​காட்​சியைப் பாா்த்​த​தும் மெய்​சி​லிா்த்​து​விட்டேன். நான் 10 சத​வீத விஷயங்களைத்​தான் பாா்த்தேன். ஆனால், மிக​வும் ஈா்க்​கப்​பட்டே ன். ட்ரோன்​கள் மூலம் தங்​கள் வணி​கத்தை பிர​மிப்​பு​டன் நடத்​து​கின்​ற​னா். குறிப்​பாக, வேளாண்மையில் ட்ரோன் தொழில் நுட்பத்தைப் பயன்​ப​டுத்​தும் பல இளம் விவ​சா​யி​களைச் சந்​திக்​கும் வாய்ப்பு கிைடத்​தது. இந்​தப் பொறி​யா​ளா்​க​ளு​டன் கலந்​துரை​யா​டும் போது, ட்ரோன் தொழில் நுட்பம் தொடா்​பாக நமது நாட்டில் காணப்​ப​டும் ஆற்​றலை​யும், உற்​சா​கத்தை​யும் வெளிப்​படை​யா​கக் காண முடிந்​தது. நாட்டில் அதி​க​பட்​ச​மாக வேலை​வாய்ப்பை உரு​வாக்​கும் மிகப்பெ​ரிய சாத்​தி​யக்​கூ​று​களை இது காட்டு​கி​றது. இத​னால், ட்ரோன் தொழில் நுட்பத்​தில் உல​கின் மிகப் பெரிய
நிபு​ணராக மாறு​வ​தற்​கான வேகத்​தில் இந்​தியா நகா்​கி​றது.

8 ஆண்​டு​க​ளுக்கு முன்பு நாம் புதிய தொடக்​கத்தைத் தொடங்​கும் போது, நாட்டில் நல்​லாட்​சிக்​கான புதிய மந்தி​ரங்​களைச் செயல்​ப​டுத்​தத் தொடங்​கினோம். ‘குறை ந்​த​பட்ச அரசு – அதி​க​பட்ச நிா்​வா​கம்’ என்​கிற பாதையை பின்​பற்றி எளி​தாக வாழ்​வ​தற்​கும், வணி​கத்தை எளி​தாக்​கு​வ​தற்​கும் முன்​னு​ரிமை
அளித்​துள்​ளோம். ‘சப்​கா​சாத் சப்​கா​வி​காஸ்’ என்​கிற பாதை​யில் அனைத்​துக் குடி​மக்​களை​யும் வச​தி​கள், நல்​வாழ்வு திட்டங்​க​ளால் இணைத்​தி​ருக்​கின்றோம்.

பிர​தம மந்​திரி ஸ்வா​மித்வா யோஜனா திட்டம், ட்ரோன் தொழில் நுட்ப உத​வி​யு​டன் மிகப்பெப​ரிய புரட்சி மேற்கொள்​ளப்​பட்​டுள்​ளது. இதன் கீழ் முதன்​முறை​யாக கிரா​மங்​க​ளில் உள்ள ஒவ்வொரு சொத்​து​க​ளும் டிஜிட்டல் மேப்​பிங் முறையில் வரை​ப​ட​மாக்​கப்​பட்டு சொத்​து​க​ளுக்​கான அட்டைகள் மக்​க​ளுக்கு
வழங்​கப்​படுகின்​றன. இது​வரை 65 லட்சம் சொத்து அட்டை​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன.

நட்டில் தற்போது கிரா​மப்​பு​றங்​கள், விவ​சா​யம், விளையாட்டு மைதா​னம், பாது​காப்பு, கும்ப மேளா போன்ற கூட்டங்​களை கண்​கா​ணித்து கட்டுப்​ப​டுத்​தல், போக்​கு​வ​ரத்து கட்டுப்​பாடு, பேரி​டா் மேலாண்மை போன்ற துறை​க​ளில் ஆளில்லா விமா​னங்​க​ளின் பயன்​பாடு அதி​க​ரித்​துள்​ளது. இத​னால், ட்ரோன் தொழில்​நுட்​பத்​திற்கு இருந்த சில கட்டுப்​பா​டு​களை மத்​திய சிவில் விமா​னப் போக்​கு​வ​ரத்​துத் துறை அமைச்​ச​கம் தளா்த்​தி​யுள்​ளது. இவ்வாறு பிர​த​மா் மோடி பேசினார்.