இந்த புத்தாண்டு சோகமாக தொடங்கியதாக லட்சுமி மேனன் சோகம்!

பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார் லட்சுமி மேனன். தற்போது இரண்டு படங்களில் நடித்துவரும் லட்சுமி மேனனுக்கு இந்த புத்தாண்டு சோகமாக தொடங்கியதாக அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

சுந்தர பாண்டியன் மற்றும் கும்கி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அவரது முதல் படமான சுந்தர பாண்டியன் நல்ல வரவேற்பு பெற்றது. கும்கி படமும் நல்ல வெற்றி படமாக அமைந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது சினிமாவில் நடிக்க தொடங்கினார் லட்சுமி மேனன். தொடர்ந்து படங்களிலும் நடித்து வந்தார். இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாருடன் குட்டி புலி படத்திற்காக இரண்டாவது முறையாக லட்சுமி மேனன் இணைந்தார். அதன்பிறகு மஞ்சப்பை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், மிருதன், றெக்க, வேதாளம், புலிக்குத்தி பாண்டி என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இதில் குறிப்பாக வேதாளம் படத்தில் தல அஜித்திற்கு தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஆரம்ப காலகட்டத்தில் தொடர்ந்து புதுப்புது படங்களின் வாய்ப்புகள் பெற்று வந்த லட்சுமி மேனனுக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைந்தது. சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவிடுவது நடனமாடிய வீடியோவை ரெக்கார்ட் செய்து அந்த வீடியோவை பதிவிடுவது என இருந்தபோதிலும் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்கப்பெறவில்லை. புலிக்குத்தி பாண்டி படத்திற்கு பிறகு சந்திரமுகி 2 திரைப்படம் நல்ல ஓபனிங் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லட்சுமி மேனன் கதாபாத்திரமும் படமும் பெருவாரியான மக்களின் விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு அனைவரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வரும் இந்த சமயத்தில் இந்த புத்தாண்டு அவருக்கு சரியாக இல்லை எனவும் சிலருக்கு சரியாக அமையலாம் சிலருக்கு சரியாக அமையாமலும் இருக்கலாம் ஆனாலும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டு இருக்கிறார்.