அண்மை காலமாக கீர்த்தி சுரேஷை ஒரு விஷயத்திற்காக விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் விமர்சித்தவர்களுக்கு கீர்த்தியின் அம்மா மேனகா பதில் அளித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் செய்வது லண்டன், பாம்பேல சாதாரணம் என்று கூறியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடிகை மட்டும் அல்ல ஃபேஷன் டிசைனரும் கூட. அதனால் தான் ஆடை விஷயத்தில் அசத்தலாக இருக்கிறார் கீர்த்தி. தன் எடையை வெகுவாக குறைத்துவிட்ட பிறகு மாடர்னாக உடை அணிகிறார். சில சமயங்களில் கிளாமராக வருகிறார். என்ன இந்த கீர்த்தி சுரேஷ் கவர்ச்சிக்கு மாறிவிட்டாரே என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா தன் மகளின் உடை விஷயம் குறித்து பேசியிருக்கிறார். கீர்த்திக்கு தன் லிமிட் தெரியும். அவர் அணியும் மாடர்ன் உடைகள் எல்லாம் லண்டன், பாம்பேயில் சர்வ சாதாரணம். பலரும் அந்த உடைகளை அணிந்து வெளியே செல்வதை பார்க்க முடியும். கீர்த்தி படிச்சது ஃபேஷன் பற்றி தான். கிளாமரில் ஒரு லிமிட்டை மெயின்டெய்ன் செய்து வருகிறார் என் மகள். தனக்கு எது சரி என்பது கீர்த்திக்கு தெரியும் என்றார்.
கீர்த்தியின் அம்மா சொல்வதும் சரி தான். நடிப்புத் திறமையை பெரிதாக நம்பும் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி கடலில் குதித்துவிடவில்லை. ஒரு அளவோடு தான் கவர்ச்சியாக நடிக்கிறார். அது க்யூட்டாகவும் இருக்கிறது. தான் படித்த படிப்பை வீணடிக்காமல் தன் உடை விஷயத்தில் பயன்படுத்துகிறார். கீர்த்தி ஒரு புது உடை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டால் அது வைரலாகிவிடும்.
கெரியரை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பிசியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவருக்கும், தொழில் அதிபருக்கும் திருமணம். கீர்த்திக்கும், அரசியல் பிரபலத்தின் மகனுக்கும் திருமணம். கீர்த்திக்கும், வெளிநாட்டில் வாழும் நபருக்கும் திருமணம் என அவ்வப்போது வதந்திகள் பரவுகிறது. ஆனால் தற்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியா கீர்த்திக்கு இல்லை என்கிறார் அம்மா மேனகா.