விஜயகாந்த் சமாதிக்கு முன்பு விழுந்து வணங்கிய எம்.எஸ். பாஸ்கர்!

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய காட்சிகள் வெளியாகி உள்ளன.

புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக மாறியுள்ளது. அவர் மூலமாக சினிமாவுக்கு வந்தவர்கள் பல நடிகர்கள். அவரது மறைவு நடிகர்களை உலுக்கி எடுத்து அவரது சமாதியை பார்த்ததும் கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கி நடிகர்கள் அஞ்சலி செலுத்தும் காட்சிகளை தொடர்ந்து பார்க்க முடிகிறது. பொதுமக்களும் தொடர்ந்து வந்து அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய காட்சிகள் வெளியாகி உள்ளன. எம்.எஸ். பாஸ்கர் தமிழ் சினிமாவில் சிறந்த குணசித்திர நடிகராக வலம் வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா டிவி தொடர் மூலம் பிரபலமான அவர் விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தில் ஒரு சின்ன காமெடி ரோலில் நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில், விஜயகாந்த் மறைவை தாங்க முடியாமல் அவர் சமாதி முன்பாக எம்.எஸ். பாஸ்கர் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்த காட்சிகள் ரசிகர்களை உருக செய்துள்ளன.

பெரிய மாலையை எடுத்துக் கொண்டு விஜயகாந்த் சமாதி மீது போட்ட எம்.எஸ். பாஸ்கர் அப்படியே விழுந்து வணங்கி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் சில நிமிடங்கள் பித்துப் பிடித்தவர் போல அமைதியாக அப்படியே உறைந்துப் போய் உட்கார்ந்துக் கொண்டு கண்கலங்கியபடி விஜயகாந்த் பற்றிய நினைவுகளில் மிதந்து அவரது ஆன்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார். அந்த காட்சிகள் தற்போது தீயாக பரவி வருகின்றன.