கர்ப்ப காலத்தை கணவருடன் மகிழ்ச்சியாக கழிக்கும் அமலா பால்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். இதனையடுத்து அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அமலா பால். சிந்து சமவெளி துவங்கி ஆடை படம் வரையில் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கர்ப்ப காலத்தில் மலசானா யோக செய்திருக்கும் வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமலா பால். அத்துடன் மலசானா யோகா செய்வதை மிகுந்த மகிழ்ச்சியுடன் நினைக்கிறேன். இந்த யோகாவை இடுப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு மந்திரமாக கருதுகிறேன். நீண்ட கடற்கரையில் உடற்பயிற்சி செய்வது. சூரிய அஸ்தமனத்தை வெறுங்காலுடன் பார்ப்பது, கர்ப்ப நேரத்தில் ஏற்படும் குமட்டலுக்கு சிறந்த சிகிச்சையாக இருக்கும். எனது கால்கள் மணலையும், உப்பு நீரையும் தொடும் போது அதை ஒரு அதிசய மருத்துவ குணமாக கருதுகிறேன். இந்த யோகாவை செய்வதற்கு முன்பாக மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனையையும் பெற்றுக்கொள்ள வேண்டும். எனது கணவர் மிகச்சிறந்த நண்பராக இருக்கிறார். என்னை மிகவும் நன்றாக கவனித்து கொள்கிறேன். நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். இவ்வாறு தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் அமலா பால். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.