பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு எதுவுமே கிடைக்கல: ரச்சிதா

சின்னத்திரை நடிகையான ரச்சிதா தான் புதியதாக நடிக்கும் திரைப்பட பூஜையில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் அங்கு கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு எதுவுமே கிடைக்கல. என்னுடைய திறமையின் மூலமாகத்தான் எனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறதே தவிர பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் எனக்கு எந்த வாய்ப்பும் ஸ்பெஷல் ஆக வரவில்லை என்று கூறியுள்ளார்.

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று பெரிய முயற்சி எடுத்து பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது எக்ஸ்ட்ரீம் எனும் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த ரச்சிதா தான் என்னுடைய அடுத்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்றும் அதோடு கண்டதையெல்லாம் வைரல் ஆக்குவதை விட இதை வைரல் ஆக்குங்கள் என்றும் கூறியிருந்தார். அதை தொடர்ந்து நேற்று அதாவது ஞாயிற்றுக்கிழமை அவருடைய படத்திற்கான பூஜை வேலைகள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அங்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்ற போது அதில் ரச்சிதாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்கிறார்களே அது உண்மையா? என்று கேட்ட கேள்விக்கு, அதற்கான வாய்ப்பை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிக் பாஸ் நம் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு பெரிய தளம். அதில் நம் திறமையை பார்த்து மக்கள் நமக்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பார்கள். அதை பார்த்து இயக்குனர்கள் பட வாய்ப்பு வழங்குவார்கள். திறமையை பார்த்துதான் வாய்ப்பு வரும் பிக்பாஸுக்கு போனாலே வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் உண்மை இல்லை. இதுவரை என்னுடைய சீரியல்கள் மூலம்தான் எனக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அதோடு கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் வாழ்க்கை மாறிவிடும் என்று சொல்கிறாரே, அது பொய்யா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எப்போதுமே இந்த பிக்பாஸால் உங்களுக்கு வாய்ப்பு வரும் என்று சொல்லவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுடைய திறமையை பார்த்து உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல எல்லோருக்கும் உண்மையான திறமை வெளியே வரும் போது தான் வாய்ப்பு கிடைக்கிறது என்று அந்த பேட்டியில் ரச்சிதா பேசியிருக்கிறார்.