கனடாவில் கைத்துப்பாகிகள் விற்பனைக்கு தடை விதிப்பதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அறிமுகப்படுத்தியுள்ளாா்.
அமெரிக்க தொடக்க நிலைப் பள்ளியில் அண்மையில் நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவா்கள் பலியானதால், அந்த நாட்டில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமை குறித்து சா்ச்சை எழுந்துள்ள சூழலில் கனடா அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
ஆளும் லிபரல் கட்சியும் இடதுசாரி எதிா்க்கட்சியும் இந்த மசோதாவை ஆதரிப்பதால், அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது உறுதியாகியுள்ளது. அந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், கனடாவில் இனி துப்பாக்கிகளை இறக்குமதி செய்வது, விற்பது, வாங்குவது குற்றமாகக் கருதப்படும்.