நயன்தாரா தன்னுடைய கணவரை இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்துவிட்டதாக தகவல்!

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து கொண்டு பின் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் இருக்கும் நிலையில், நயன்தாரா விக்னேஷ் சிவனை அன்பாலோ( UnFollow ) செய்துவிட்டதாக செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரௌவுடி தான் படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். இந்த படத்திற்கு பிறகு இருவரும் காதல் புறாவாக பல இடங்களில் சுற்றிக்கொண்டுவந்தனர். இதையடுத்து, இவர்களது திருமணம் அனைவரும் வியக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து, இரட்டை குழந்தைகளுக்கு தாய் ஆனார் நயன்தாரா. குழந்தைகளுக்க உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என பெயர் வைத்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியான நடித்து வரும் நயன்தாரா, பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டில் தனது தடத்தை பதித்தார். அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து நயன்தாராவின் சம்பளத்தை கணிசமாக உயர்த்தியது. மேலும், ஜவான் படத்தில் நடித்ததற்காக தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் நயன்தாராவிற்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். அதே போல அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படமும் சிறப்பாக அமைந்தது, நயன்தாராவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

நயன்தாரா நடிகையாக மட்டுமில்லாமல், 9ஸ்கின் என்ற அழகு சாதன பொருளை தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தொழிலதிபர் டெய்சி மோர்கன் ஆகியோருடன் இணைந்து தயாரித்து வருகிறார். 9 ஸ்கின் பெண்களின் அழகு மற்றும் சுய பராமரிப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பிரீமியம் ஸ்கின் புரோடக்ட்ஸ்களை வழங்குகிறது. இந்த புரோடக்ட் இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கிடைக்கிறது.

இப்படி தனது கணவருடன் இணைந்து சினிமா, பிஸ்னஸ் என பிஸியாக ஓடிக்கொண்டு இருக்கும் நயன்தாரா, தற்போது திடீரென தன்னுடைய கணவரை இன்ஸ்டாகிராமில் UnFollow செய்துவிட்டதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. மேலும் அவர் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில், ஷேர் செய்துள்ள பதிவில், எனக்கு இது கிடைத்தது என்று அவள் கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள் என்கிற கேப்ஷனும் இடம்பெற்று உள்ளது. இதனால் விக்கி நயனும் ஏதாவது பிரச்சனையா? என குழப்பத்தில் உள்ளனர். ஆனால்,விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பகிர்ந்துள்ள அனைத்து போட்டோக்களும் இதில் இருப்பதால் இது ஏதோ தொழில்நுட்ப கோளாறு என்று ரசிகர்கள் மனதை தேற்றி வருகின்றனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் காதலர் தினத்தன்று, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நயன் தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “எங்கள் காதலுக்கு வயது பத்து. ஒரு தசாப்தமாக நயனுடன் நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ரோஜாப்பூக்கள் நிரம்பிய பூங்கொத்து ஒன்றையும் பரிசாக கொடுத்து தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.