என் மரணத்திற்கு பதில் சொல்ல சொல்லி சீமானுக்கு அழைப்பு வரும்: விஜயலட்சுமி வீடியோ!

தாம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், அதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்தான் காரணம் எனவும் கூறி நடிகை விஜய லட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து கருகலைப்பு செய்ய வைத்துவிட்டதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார். பின்னர் தாம் கர்நாடகா செல்வதாக கூறி வீடியோ வெளியிட்டு கர்நாடகா சென்றார்.

இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:-

பிப்ரவரி 29ஆம் தேதி வெளியிட்ட வீடியோவில் சீமானை பேச சொல்லி கோரி இருந்தேன். இன்று மார்ச் 5ஆம் தேதி. 2008ஆம் ஆண்டு என் அக்காவின் பிரச்னைக்காகத்தான் நான் சீமானை சந்தித்தேன், என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி என்னுடன் மூன்று ஆண்டுகள் குடும்பம் நடத்தி, என் வாழ்கையை சீரழிச்சி, ரகசியமா என்னோடு திருமணமும் பண்ணி, அதை வெளியில் சொல்லாம, தலைவர் பிரபாகரன் பேரை சொல்லி என்னை ஏமாற்றி எல்லாத்தையும் நாசம் செய்தார். இவருக்கு ஏதோ பிரச்னை என சொல்லிவிட்டு அப்படியே என்னை நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். என்னை வாழவிடுவாரா என்று பார்த்தால், தமிழ்நாட்டில் எனக்கு விபச்சாரி என்ற பட்டம் கட்டி என்னை அசிங்கப்படுத்தி, எனக்கு யார் உதவி செய்யவந்தாலும் என்னை பற்றி கொச்சை கொச்சையாக பேசினார்.

போன வருஷம் மார்ச்சில் திமுகவினர் முன்னாடி என் மானம் போகுது, என்னை பற்றி பேச வேண்டாம், நான் அவளை காப்பாற்றுகிறேன், நான் தான் அவளின் புருஷன் என்று மதுரை செல்வத்தை வைத்து டீலிங் பேசினார். இன்று கயல்விழிதான் தன் உயிர் என்று பெரிய ட்ராமா போடுகிறார். சீமான் செய்த அட்டூழியம் ஒன்று, இரண்டு கிடையாது. கர்நாடகாவில் என்னால் வாழ முடியவில்லை என்று சொன்னால் கூட, பரவாயில்ல நீ கர்நாடகாவில் சாவு என விடுகிறார் என்றால், அதுதான் நடக்கபோகிறது.

இதுதான் கடைசி வீடியோ தமிழ்நாட்டுக்கு, இன்னும் 2 நாள் கழித்து நான் எப்படி செத்தேன் என்பதை கர்நாடகா தெரியப்படுத்துவார்கள், ஜெக்கேஷ் என்ற நடிகரோடு என்னை சேர்த்து வைத்து பேசி என்னை கொச்சைப்படுத்திவிட்டனர். கர்நாடகாவில் இருந்து சீமானுக்கு அழைப்பு வரும், என் மரணத்திற்கு பதில் சொல்ல சொல்லி அவருக்கு அழைப்பு வரும், இதுதான் கடைசி வீடியோ என தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்,

என்னுடைய மரணம், சீமான், நாம் தமிழர் கட்சி என்ன என்பதை நன்றாக புரிய வைத்துவிடும், இந்த மாதிரியான நபர் தமிழ்நாட்டுக்கு வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், நன்றி வணக்கம். இவ்வாறு நடிகை விஜயலட்சுமி அந்த வீடியோ பதிவில் கூறி உள்ளார்.