தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழும் வரலட்சுமி சரத்குமாருக்கு அண்மையில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் வரலட்சுமிக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் கடந்த சில நாட்களாகவே இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் இதுக்குறித்து வரலட்சுமி சரத்குமார் விளக்கமளித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு சிம்பு ஜோடியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘போடா போடி’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். இதனையடுத்து பல படங்களில் நடித்தவர், இமேஜ் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களில் எல்லாம் நடித்து வருகிறார். ஹீரோயினாக நடித்து வந்த நிலையிலே வில்லியாகவும் நடிக்க துவங்கி விட்டார் வரலட்சுமி. இதனால் தென்னிந்திய சினிமாவில் இவரை தைரியமான நடிகையாக அனைவரும் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. கடந்த 1 ஆம் தேதி மும்பையை சார்ந்த தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ், வரலட்சுமி இருவரும் நிச்சயதார்த்தம் நடந்தது. இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்களும், நெருங்கிய நண்பர்களும் இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர். இது தொடர்பான போட்டோஸ், வீடியோஸ் எல்லாம் இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்தது.
இந்நிலையில் வரலட்சுமி சரத்குமாருக்கு போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதுக்குறித்து தற்போது விளக்கம் அளித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், உண்மைத்தன்மையை ஆராய்ந்து மீடியாக்கள் நல்ல செய்தியை வெளியிட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். சமீப காலமாக பிரபலங்கள் குறித்து பல தவறான தகவல்கள் அதிகளவில் குவிந்து வருகின்றன. என்னைப்பற்றி பொய்யான செய்திகள் வெளியாகி வருவது வருத்தமளிக்கிறது. நாங்கள் நடிக்கவும், மக்களை மகிழ்விக்கவும், எங்களின் வேலையை செய்யவும் முயற்சி செய்கிறோம். நாட்டில் முக்கியமான ஆயிரம் பிரச்சனைகள் உள்ளது. மீடியாக்கள் அதனை கவனிக்கலாம். அதனை விட்டு பிரபலங்களின் குறைகளை கண்டறிவது ஏன்? என தனது பதிவில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.