பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சென்னை ஐகோர்ட் 3 ஆண்டுகள் தண்டனை அளித்தது. இதனால் அவர் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். உச்ச நீதிமன்றத்தில் அவர் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதன் மூலம் அவர் மீண்டும் எம்எல்ஏவாக ஆனார்.
இதற்கிடையே அவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். இதையடுத்து பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்ய முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்த அளித்திருந்தார். இருப்பினும், இதை ஆளுநர் ரவி ஏற்க மறுத்துள்ளார். பொன்முடியை அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என முதல்வருக்கு ஆளுநர் ரவி பதில் கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்றம் தண்டையைத் தான் நிறுத்தி வைத்துள்ளது என்றும் குற்றவாளி இல்லை என்று கூறவில்லை என ஆளுநர் ரவி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.