2023 இறுதியில் உலக முதலீட்டாளர் மாநாடு – தமிழக முதல்வர் ஸ்டாலின்

சட்டசபையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு:இந்த அரசு பொறுப்பேற்ற பின், 68 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீடு; 2.05 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கக் கூடிய வகையில், 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சென்னையில், 2021 ஜூலையில் நடந்த ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி வழியாக, 17 ஆயிரத்து 141 கோடி ரூபாய் முதலீடு; 55 ஆயிரத்து 54 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

அடுத்து, 2021 செப்., 22ம் தேதி, ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி வழியாக, 1,880 கோடி ரூபாய் முதலீடு; 39 ஆயிரத்து 150 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில், 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.கோவையில் நடந்த, ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி’ என்ற நிகழ்ச்சி வழியாக, 35 ஆயிரத்து 208 கோடி ரூபாய் முதலீடு; 76 ஆயிரத்து 795 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில், 59 ஒப்பந்தங்கள் போடப்பட்டன.